ரோகித் சர்மாவிற்கும், மனைவி ரித்திகாவிற்கும் தியானம் கற்றுக் கொடுத்த ஆன்மீக குரு..

By 
yoga7

குஜராத்தில் 1956 ஆம் ஆண்டு தாஜி பிறந்தார். கமலேஷ் படேல் என்ற தாஜி  அகமதாபாத்தில் மருந்தாளுநராகப் (பார்மஸி) பயிற்சி பெற்றார். மருந்தியல் மாணவராக, தாஜி 1976 இல் ஷாஜஹான்பூரின் ராம் சந்திராவின் வழிகாட்டுதலின் கீழ் ராஜயோக தியானத்தின் சஹாஜ் மார்க் முறையைப் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

அறிந்தவர்களுக்கு தியானம் கற்றுக் கொடுக்கும் குரு. அறியாதவர்களுக்கு தாஜி ஒரு எழுத்தாளர், ஆன்மீக தலைவர், சஹாஜ் மார்க் ஆன்மீக பயிற்சியின் ராஜா யோகா மாஸ்டர்களின் வரிசையில் 4ஆவதாக வந்தவர்.

தியானம் மற்றும் ஆன்மீகத்தில் அதிக சக்தி இருப்பதாக நம்பும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா இருவரும், தாஜியிடம் தியானம் கற்றுக் கொண்டுள்ளனர். ரோகித் சர்மாவும் ரித்திகா சஜ்தேவும் ஹைதராபாத்தில் உள்ள சேகூரில் உள்ள அவரது தியான மையத்திற்குச் சென்றிருந்தனர், அங்கு தாஜி தம்பதியினருக்கு 'இதயம் நிறைந்த தியானம்' அமர்வை நடத்தினார்.

மனித மனம் கவனம் செலுத்தும் போது என்ன செய்ய முடியும் என்பதற்கு ரோகித் சர்மா ஒரு சிறந்த உதாரணம். ரோகித் எங்களுடன் தியானம் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற இது இன்னும் பலரை ஊக்குவிக்கும்" என்று தாஜி அப்போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தியானம் மற்றும் ஆன்மீகம் என்ற தலைப்புகளில் 2 புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

 

Share this story