டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா..

By 
r5r5

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

இதில், 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் திரும்பியுள்ளனர். மேலும், இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் ரோகித் சர்மா, 51 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி 39 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோகித் சர்மா, இதுவரையில் 148 டி20 போட்டிகளில் விளையாடி, 3853 ரன்களும், 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 118 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 462 (டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20) போட்டிகளில் விளையாடி 582 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

டெஸ்ட் போட்டியில் மட்டும் 77 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 323 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 9 சிக்ஸர்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயிலின் (331) சிக்ஸர்கள் சாதனையை முறியடிப்பார்.

இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் ரோகித் சர்மா இந்த தொடரில் மட்டும் 18 சிக்ஸர்கள் அடித்துவிட்டால் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். 

தற்போது வரையில் அவர் டி20 கிரிக்கெட்டில் 182 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இப்போது வரையில் 182 சிக்ஸர்கள் உடன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மா இன்னும் 18 சிக்ஸர்கள் அடித்தால் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது போட்டி 14ஆம் தேதியும், 3ஆவது டி20 போட்டி 17ஆம் தேதியும் நடக்கிறது.

Share this story