ரோகித் சர்மா சிஎஸ்கே அணியில் இருப்பார்: மைக்கேல் வாகன் கருத்து..

By 
vakan2

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய முதல் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், பின்னர் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிற்து.

இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணியில் இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கலாம்.

நான் தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக இருந்திருப்பேன். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வந்தது அவருக்கு அழுத்தத்தை உண்டாக்கும். மேலும், டி20 உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக இருக்க போகிறார் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரோகித் சர்மா ஹைதராபாத் அணிக்கு செல்ல இருப்பதாகவும், சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவர் தான் அடுத்த கேப்டன் என்றும் விவாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ரோகித் சர்மாவின் ஐபிஎல் பிளான் குறித்து அடுத்த ஆண்டு அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story