தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு, ரூ.3 கோடி பரிசுத்தொகை : முதலமைச்சர் அறிவிப்பு

By 
Rs 3 crore prize money for Tamil Nadu gold medalists Chief Minister's announcement

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,

18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுகிறது. 

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு, தலா ரூ. லட்சம் ஊக்கத்தொகையும் முதலமைச்சர்  வழங்கியுள்ளார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது :

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசியலை விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்கள், இந்த நாட்டில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 

விளையாட்டுப் போட்டிகளில், அணி ஒற்றுமை முகவும் முக்கியமானது வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும், களத்தில் ஓரணியாக செயல்பட்டால் வெற்றி சாத்தியம். வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்' என முதலமைச்சர் கூறினார்.

Share this story