கேப்டனாக ருத்துராஜும் என்னைப் போல ஒருவர்தான்.! டோனி பாராட்டு..

By 
ruthu8

ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியிலேயே வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இரண்டாவது வெற்றிக்காக இரண்டு அணிகளுமே தீவிர மோதலில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொண்ட ஆர்சிபி இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வென்றதே இல்லை. அந்த ரெக்கார்ட் இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் இன்று RCB vs KKR போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு ஆர்சிபி அணி கொல்கத்தாவை தனது ஹோம் க்ரவுண்டில் வைத்து வென்றதே இல்லை. இந்நிலையில் இன்று அந்த ரெக்கார்டை உடைத்து ஆர்சிபி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

முன்னதாக, முக்கியமான போட்டிகளில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் சிஎஸ்கே வென்றுள்ளது. இந்த சீசனுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ருத்துராஜ் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவரின் கேப்டன்சி பற்றி தோனி ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தோனி “நான் எப்போதும் களத்தில் அதிகமாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். அதுவும் புதிய வீரர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் நான் கோபத்தை வெளிப்படுத்த மாட்டேன். ருத்துராஜும் அதுபோல ஒரு கேப்டனாக தான் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.


 

Share this story