சானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக், நடிகை சனா ஜாவேத்துடன் 2-வது திருமணம்..

By 
sas3

சானியா மிர்சாவை பிரிந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் 2ஆவதாக நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சானியா மிர்சா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து பதிவிட்டிருந்தார். இதனால், சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமண புகைப்படங்களை சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சனா ஜாவேத் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷெ இ ஷாத் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹானி என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

சனா ஜாவேத் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகரும், இசையமைப்பாளருமான உமைர் ஜாஸ்வால் என்பதை திருமணம் செய்தார். ஆனால், இந்த திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு இருவரும் இன்ஸ்டா பக்கத்திலிருந்து புகைப்படங்களை நீக்கினர். இந்த நிலையில் தான் தற்போது சனா ஜாவேத்திற்கு 30 வயதாகிறது. சோயிப் மாலிக்கிற்கு 41 வயதாகிறது.

பதினொறு வயது வித்தியாசத்தில் சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவேத் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக கிரிக்கெட் பிரபலங்கள் விவாகரத்து தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் விவாகரத்து மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் இடையிலான பிரிவு பற்றிய செய்திகள் தான் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தான் தற்போது டென்னிஸ் உலகில் உச்சம் தொட்ட இந்திய வீராங்கனையான சானியா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோயிப் மாலிக் 2ஆவதாக பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story