சானியா மிர்சா வெர்ஷன் : ஒரு சூறாவளி, தென்றலாக முடிவெடுத்து விட்டது..

sania6

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (வயது 36) துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி, ரஷியாவின் வெரோனிகா-லியுத்மிளா ஜோடியிடம் 4-6, 0-6 என தோல்வியடைந்து வெளியேறியது.

சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார்.

2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
 

Share this story