காம்பீருக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த ஷாருக்கான்.! வெற்றியை கொண்டாடிய வீரர்கள்...

By 
saru

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இதில், அபிஷேக் சர்மா 2, டிராவிஸ் ஹெட் 0, ராகுல் திரிபாதி 9 என்று வரிசையாக ஹைதராபாத் வீரர்கள் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் ரெட்டி 13, எய்டன் மார்க்ரம் 20, ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த ஷாபாஸ் அகமது 8, அப்துல் சமாத் 4, ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக பேட் கம்மின்ஸ் 24 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியில் 24 ரன்களே அதிகபட்சமாக ரன்னாக இருந்துள்ளது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அப்போது கேகேஆர் 8.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசியில் கேகேஆர் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேகேஆர் 10.2 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது. தற்போது முதல் முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டிராபியை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் மிக மோசமாக விளையாடி சன்ரைசர்ஸ் ஹதராபாத் தோல்வி அடைந்த நிலையில் அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர்விட்டு அழுத வீடியோ வைரலானது. இது ஒரு புறம் இருந்தாலும், 3ஆவது முறையாக கேகேஆர் சாம்பியனான நிலையில் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், ஆலோசகரான கவுதம் காம்பீருக்கு நெற்றியில் முத்தமிட்டுள்ளார். மேலும், மற்ற வீரர்களுக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்துள்ளார். கேகேஆர் வீரர்கள் கௌதம் காம்பீரை தங்களது தோள் மீது சுமந்து வெற்றியை கொண்டாடினர்.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 2, டிராவிஸ் ஹெட் 0, ராகுல் திரிபாதி 9 என்று வரிசையாக ஹைதராபாத் வீரர்கள் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் ரெட்டி 13, எய்டன் மார்க்ரம் 20, ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த ஷாபாஸ் அகமது 8, அப்துல் சமாத் 4, ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக பேட் கம்மின்ஸ் 24 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியில் 24 ரன்களே அதிகபட்சமாக ரன்னாக இருந்துள்ளது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அப்போது கேகேஆர் 8.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசியில் கேகேஆர் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேகேஆர் 10.2 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது. தற்போது முதல் முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டிராபியை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் மிக மோசமாக விளையாடி சன்ரைசர்ஸ் ஹதராபாத் தோல்வி அடைந்த நிலையில் அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர்விட்டு அழுத வீடியோ வைரலானது. இது ஒரு புறம் இருந்தாலும், 3ஆவது முறையாக கேகேஆர் சாம்பியனான நிலையில் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், ஆலோசகரான கவுதம் காம்பீருக்கு நெற்றியில் முத்தமிட்டுள்ளார். மேலும், மற்ற வீரர்களுக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்துள்ளார். கேகேஆர் வீரர்கள் கௌதம் காம்பீரை தங்களது தோள் மீது சுமந்து வெற்றியை கொண்டாடினர்.

Share this story