எம்.எஸ்.டோனி வீட்டில் ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடி – மொட்டை மாடியில் கொடியை பறக்க விட்ட ஷமி..

By 
rday6

ராஞ்சியில் உள்ள எம்.எஸ்.தோனியின் வீட்டில் 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 75ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ் பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்பு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணி வகுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதில், தமிழ்நாட்டின் சார்பில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டது. 

இதில் பாடல்கள், பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய அலங்கார காட்சிகள் எல்லாம் மக்களை ரசிக்கும் கவரும் வகையில் இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தை பிரதிபலிக்கும் வகையில் அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனியின் வீட்டில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ராஞ்சியிலுள்ள அவரது இல்லத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளதை சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது வீட்டு மொட்டை மாடியில் தேசிய கொடியை கையில் பிடித்து அசைத்தவாறு போஸ் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் தன் பங்கிற்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் அமைதி, அன்பு மற்றும் செழிப்பு நிறைந்த குடியரசு தின வாழ்த்துக்கள் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

 


 

Share this story