இந்திய அணிக்கு கேப்டன் ஆகிறார் ஷிகர் தவான்? : பிசிசிஐ டுவிஸ்ட்..

 

By 
shi6

2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணன் வழிநடத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், முடிவு இறுதி செய்யப்படவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முதன்முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒப்புக்கொண்டது. தவான் தவிர, முன்னாள் இந்திய பேட்டர் விவிஎஸ் லக்ஷ்மனும் இந்த போட்டிக்கான தலைமை பயிற்சியாளராக இந்திய அணியில் சேரலாம்.

ஆசிய விளையாட்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கீழ் வராது மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அங்கீகரிக்கப்படாது. ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதிகளில் ஆசிய விளையாட்டுகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவால் அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை நடத்தப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும்.
 

Share this story