இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்
 

Encourage the Indian players, AR Rahman music lyrics

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது.

11வீரர்கள் :

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, இந்தியாவைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. 

இது குறித்து, டுவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், நமது நாட்டின் திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக “Hindustani Way” என்ற பாடல் தயாராகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

9-ந்தேதி வெளியீடு :

இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை, இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார். அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர். இந்தி பாடல் ஆங்கிலத்தில் "தி இந்தியன் வே" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது,

ஏ.ஆர்.ரஹ்மானின் “Hindustani Way”பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story