மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா.., மீண்டு வந்து சிறப்பான சம்பவம் செய்த டீம் இந்தியா..

By 
srsrr

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம் 2, கேப்டன் டீன் எல்கர் 4, டோனி டி ஜோர்ஸி 4, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த டேவிட் பெடிங்காம் மற்றும் கேப்டன் கைல் வெர்ரேனே ஓரளவு தாக்குபிடித்த நிலையில் இருவருமே சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். டேவிட் 12 ரன்னும், கைல் 15 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து வந்த மார்கோ ஜான்சென் 0, கேசவ் மகாராஜ் 3, கஜிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 4 என்று வரிசையாக ஆட்டமிழக்கவே கடைசியாக தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது.

இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா 3ஆவது முறையாக குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்துள்ளது. இதற்கு முன்னதாக 79 (2015 ஆம் ஆண்டு) மற்றும் 84 (2006 ஆம் ஆண்டு) ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்துள்ளது.

இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் உள்பட 15 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக ஆசிய கோப்பையில் நடந்த ஒருநாள் போட்டியி இலங்கை அணிக்கு எதிராக சிராஜ் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு எதிராக குறைந்தபட்ச ரன்களில் ஆட்டமிழந்த அணிகள்:

55 – தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024

62 – நியூசிலாந்து, மும்பை, 2021

79 - தென் ஆப்பிரிக்கா, நாக்பூர், 2015

81 – இங்கிலாந்து, அகமதாபாத், 2021

82 - இலங்கை, சண்டிகர், 1990

குறைவான ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள்:

5/7 – ஜஸ்ப்ரித் பும்ரா vs வெஸ்டி இண்டீஸ், நார்த் சவுண்ட், 2019

6/12 – வெங்கடபதி ராஜூ vs இலங்கை, சண்டிகர், 1990

5/13 – ஹர்பஜன் சிங் vs வெஸ்டி இண்டீஸ், கிங்ஸ்டன், 2006

6/15 – முகமது சிராஜ் vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024

5/18 – சுபாஷ் குப்தே vs பாகிஸ்தான், டாக்கா, 1955

தென் ஆப்பிரிக்கா அணியில் முதல் 4 வீரர்களும், பின்வரிசையில் 4 வீரர்களும் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் கைல் வெர்ரேனே அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்துள்ளார். மற்றொரு வீரர் டேவிட் பெடிங்காம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Share this story