ஐபிஎல் மேட்சில் சிறப்பு..ஆதலால், அஸ்வினுக்கு வந்தது நல்ல வாய்ப்பு..

By 
Special in IPL match..so, Ashwin got a good chance ..

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு :

இதற்கிடையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 

அதன்படி, விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அதேவேளை உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு :

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். 

Share this story