ஸ்போர்ட்ஸ் டுடே : கிரிக்கெட் உலகில் ருதுராஜ் சாதனை..

By 
cc6

* இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். அவர் 20 ரன்கள் சேர்த்தபோது, ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 4000 ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

* எதிர்வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் தற்போது சர்வதேச கால்பந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த சூழலில் 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“நான் ‘2026 உலகக் கோப்பை’ குறித்து இப்போதைக்கு யோசிக்கவில்லை. ஆனால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதில் பங்கேற்க முடியாமல் போவதற்கு எனது வயது காரணமாக இருக்கலாம்.

இருந்தாலும் என்ன நடக்கிறது என பார்ப்போம். இப்போதைக்கு 2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள கோபா அமெரிக்கா தொடரில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தால் தொடர்ந்து கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால் அது மிகவும் கடினம்.

 

 

Share this story