77 ரன்களில் சுருண்ட இலங்கை: போராடி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா- புள்ளிப்பட்டியலில் முதலிடம்..

By 
77r

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 4ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 19 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களும் எடுத்தனர்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கஜிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆட்னில் பார்ட்மேன் ஒரு விக்கெட் எடுத்தார்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுக்க, கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசியாக வந்த ஹென்ரிச் கிளாசென் 19 ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுக்கவே தென் ஆப்பிரிக்கா 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இலங்கை அணியில் நுவான் துஷாரா, தசுன் ஷனாகா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். வணிந்து ஹசரங்கா 2 விக்கெட் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலமாக குரூப் டி பிரிவில் இடம் பெற்ற வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள் மற்றும் இலங்கை அணிகளில் தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. வரும் 8ஆம் தேதி நடைபெறும் 15ஆவது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story