முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு திடீர் மாரடைப்பு : மருத்துவமனை தகவல்

By 
Sudden heart attack for former cricket captain Hospital information

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக். 

1992-ம் ஆண்டு பாகிஸ்தான் உலக கோப்பையை வெல்ல இவரது அதிரடியான ஆட்டம் முக்கியப் பங்கு வகித்தது.

மாரடைப்பு :

இந்நிலையில், 51 வயதான இன்சமாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. 
தற்போது, இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான கேப்டன் :

ஒருநாள் போட்டியில், அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஆவார். அவர் 378 போட்டிகளில் 11,739 ரன் எடுத்துள்ளார். 10 சதமும், 83 அரை சதமும் அடித்துள்ளார்.

டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது பாகிஸ்தான் வீரர் ஆவார். 120 டெஸ்டில் 8,830 ரன் எடுத்து உள்ளார். 

பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான கேப்டனில் ஒருவரான அவர் 2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்து வந்தார்.

Share this story