டி20 கிரிக்கெட் மிரட்டல்: ஆஸி. அணியை விரட்டி, இந்தியா அபார வெற்றி; அதிரடி ரன்ஸ் விவரம்..

By 
gygy

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

அதிரடி வீரர் சூரியகுமார் ஐந்து ரன்களிலும்,ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் வெளியேற இந்திய அணி 97 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் களத்தில் நின்ற நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். 

இதில், 5 பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். அவருக்கு அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து துணை நிற்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனை அடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரவி பிஷ்ணாய் பந்தில் ஆட்டம் இழந்தார். 

ஜோஸ் பிலிப் 4 ரன்களில் ஆட்டமிழக்க பெண் மெக்டோர்மட் மட்டும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். எனினும் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி மூன்று ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் வீசிய 18 வது ஓவரில் மேத்தீவ் வெட் ஹார்ட்ரிக் பௌண்டரிகளை அடித்து அசத்தினார். 

இதனை எடுத்து இரண்டு ஓவருக்கு 17 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் முகேஷ் குமார் அபாரமாக பந்து வீசி 19 ஆவது ஓவரில் வெறும் ஏழு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் அடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அபாரமாக யாக்கர்களை வீசி ஆர்ஸ்தீப் சிங் கடும் நெருக்கடி கொடுத்தார். 

மேத்தீவ் வெட் விக்கெட்டை 20வது ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் வீழ்த்த கடைசி மூன்று பந்துகளிலும் ஆஸ்திரேலிய வீரர்களால் சிங்கிள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 


 

Share this story