டி20 உலகக் கோப்பைக்கான லோகோ வெளியீடு.. எந்தெந்த நாடுகளில் நடைபெறும்?

By 
t20ww

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடருக்கான லோகோ வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கான லோகோ வெளியாகியுள்ள நிலையில் அந்த லோகோவை ஐசிசி அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  

2024 ஆம் ஆண்டு டி20 ஆண்கள் உலக கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க அங்கு நடத்தப்படுகிறது.

அதேபோல் உலகக்கோப்பை டி20 பெண்கள் தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை டி20 தொடருக்கான லோகோ அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த லோகோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Share this story