கேப்டன்ஷிப் பற்றி பேசுவதற்கு, கங்குலிக்கு வேலை இல்லை :  வெங்சர்க்கார் சாடல்

Talking about captaincy, Ganguly has no job Vengsarkar Sadal

கேப்டன் ஷிப் குறித்து தேர்வுக்குழுத் தலைவர்தான் பேச வேண்டும். இதில், கங்குலிக்கு எந்த வேலையும் இல்லை என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.

முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது :

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலிக்கு, தேர்வுக்குழு சார்பில் கருத்துத் தெரிவிக்க எந்த வேலையும் இல்லை. 

வீரர்கள் தேர்வு அல்லது கேப்டன்ஷிப் குறித்த எந்த பிரச்சினையையும் தேர்வுக்குழு தலைவர்தான் பேசவேண்டும்.

கிரிக்கெட் வாரியமும், தேர்வுக்குழுவினரும் இணைந்து, இந்த முடிவை எடுத்திருப்பார்கள். 

ஒயிட் பால் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் சரியாக இருக்காது என்று கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன்.

ஒரு கேப்டன் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அல்லது நீக்கப்படுகிறார். இது கங்குலியின் அதிகார வரம்பு அல்ல. இந்த சூழ்நிலையை கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. சிறப்பான முறையில் கையாண்டு இருக்க வேண்டும்.

விராட் கோலி மரியாதைக்கு தகுதியானவர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறார். அவரை மதித்திருக்க வேண்டும். நாட்டிற்காக ஆடிய அவரை காயப்படுத்தி விட்டனர்' என்றார்.
*

Share this story