தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்திக்கு தங்கம்: 7ஆவது தங்கம் கைப்பற்றிய தமிழ்நாடு..

By 
pooja1

சென்னையில் இன்று நடந்த ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றிய நிலையில், தமிழ்நாடு 7 ஆவது தங்கம் வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்‌ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்), வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் என்று பல பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் சென்னையில் இன்று நடந்த மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்ட பூஜா ஆர்த்தி தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா வீராங்கனைக்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் பூஜா ஆர்த்தி வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். இதன் மூலமாக தமிழ்நாடு அணியானது 7ஆவது தங்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

 

Share this story