பழைய கோச்சுக்கு டாட்டா; புதிய கோச் வெல்கம் : பி.வி.சிந்து அதிரடி முடிவு
 

pvsindhu

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார். இதை பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 

2019ம் ஆண்டு சிந்துவுடன் பயிற்சியாளராக இணைந்த பார்க், தொடர்ந்து சிந்துவின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது பயிற்சிக் காலத்தில் சிந்து மூன்று முறை சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார்.

 2022ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் சமீபகாலமாக பி.வி.சிந்துவின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. அவரது மோசமான பார்மிற்கு பயிற்சியாளர் பார்க் பொறுப்பேற்றதுடன், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

'பி.வி.சிந்து சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி உள்ளார். இதற்கு பயிற்சியாளராக நான் பொறுப்பாக உணர்கிறேன். எனவே அவர் ஒரு மாற்றத்தை விரும்பினார். மேலும், ஒரு புதிய பயிற்சியாளரை தேடுவதாகவும் கூறினார். அவளுடைய இந்த முடிவை மதிக்க முடிவு செய்தேன். 

அடுத்த ஒலிம்பிக் வரை அவருடன் இருக்க முடியாது என்பது வருத்தம் அளிக்கிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி' என பார்க் கூறியுள்ளார்.
 

Share this story