'டென்னிஸ் ஜாம்பவான்' ஜோகோவிச், 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

By 
'Tennis legend' Djokovic advances to 3rd round

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான மெட்வதேவ், சிட்சிபாஸ் ஆகியோர் ஏற்கனவே, 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், நெதர்லாந்தை சேர்ந்த டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினார்கள்.

ஆரம்பம் முதலே ஜாம்பவான் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

முதல் செட்டை 6-2, இரண்டாவது செட்டை 6-3, மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
*

Share this story