டென்னிஸ் டுடே : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா..

By 
sabal7

* மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார். இதில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது. வரும் 10ம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் நாளை (8.5.2023) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this story