டென்னிஸ் டுடே : தடுப்பூசி போடாத ஜோகோவிச், இன்று விளையாடுவாரா? மாட்டாரா?

Tennis Today Will Djokovic, who has not been vaccinated, play today Won't you

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன், வருகிற திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே, நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். 

அவரை, மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதுவரை, அவருக்கு விசா விலக்கு அளிக்கப்படவில்லை. 

இந்நிலையில், இன்று யார் யாருடன் மோதுவது என்பதை முடிவு செய்யும் வரைவுப் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. 

ஆனால், ஜோகோவிச் விளையாடுவா? விளையாட மாட்டாரா?  என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இதனால், போட்டி வரைவுப்பட்டியல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
*

Share this story