டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: விராட்கோலி பெற்ற இடம்..

By 
viratji

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில்  டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி  9-வது இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி வெளியிடுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேங்கள் தரவரிசைப் பட்டியலில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் 2 வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஸ்வீவன் ஸ்மித் 3 வது இடமும், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ஹிட்சேல் 4-வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஹவாஜா  5-வது இடமும், 

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம் 6-வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த லபுசேஞ்ச் 7-வது இடமும், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி புரூக் 8-வது இடமும்,  இந்தியா அணியைச் சேர்ந்த விராட் கோலி 9-வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த  ஹெட் 10 வது இடமும் பிடித்துள்ளனர்.

Share this story