டெஸ்ட் மேட்ச் அதிரடி : வெஸ்ட் இண்டீசை விரட்டி, தென்ஆப்பிரிக்கா மிரட்டல்; வெற்றி லிஸ்ட்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 251 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 321 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீசுக்கு 391 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 106 ரன்களில் சுருண்டது. இதனால் 284 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
அத்துடன், டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இன்று நிறைவடைந்த இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாக டெம்பா பவுமாவும், தொடர் நாயகனாக மார்க்ராமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.