டெஸ்ட் மேட்ச் டுடே : கேப்டன் ராகுல் பேட்டிங்.. விராட் கோலி திடீர் விலகல்..

Test match today Captain Rahul batting .. Virat Kohli abruptly withdraws ..

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில், இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 
 
இந்திய அணி பேட்டிங் :

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஜோகனர்ஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில், டாஸ் சுண்டப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ஆடுகிறது. 

முதுகுவலி காரணமாக, இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இன்றைய போட்டியில், இரு அணி வீரர்கள் விவரம்..

இந்திய வீரர்கள் :

லோகேஷ் ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட் (கீப்பர்), 

அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா வீரர்கள் : 

டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, கைல் வெரைன் (கீப்பர்), மார்கோ ஜான்சென், காஜிசோ ரபடா, 

கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, டுவைன் ஒலிவியர்.
*

Share this story