டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆட்ட நேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன தெரியுமா?

By 
scor

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களை பறி கொடுத்தனர். அந்த அணியின் துவக்க வீரர் சாக் கிராலி மட்டும்,  நிதானமாக விளையாடி 50 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 

இந்திய அணி வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வின் நான்கு விக்கெட்டைகளை கைப்பற்றி அசத்தினார்.

இதை அடுத்து  தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருவரும் அரை சதம் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த சுப்மன் கில்லும் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Share this story