இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 2 போட்டிகளில் ஷமி இடம் பெறவில்லை..

By 
shami5

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச்  இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. 

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விராட் கோலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், டி20 தொடர் 1-1 என்று சமன் செய்யப்பட்ட நிலையில் கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி 2-1 என்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டவுனில் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று முத்திரயை பதித்து டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து நாடு திரும்பியது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்த நிலையில் உடல் தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் தான் அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஷமி பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஷமி இடம் பெற வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், மற்ற 3 போட்டிகளில் அவர் இடம் பெற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இதே போன்று, காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து வெளியேறிய சூர்யகுமார் யாதவ் ஹெர்னியா அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். 

மேலும் குறைந்தது 8 முதல் 9 வாரங்கள் வரையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறமாட்டார். மேலும், அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story