அது ரெம்ப மோசமான ஆட்டம் : கங்குலி கருத்து
 

By 
That's the worst game ever Ganguly's comment

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில், இந்திய அணி டி20 போட்டிகளில் எவ்வாறு செயல்பட்டது  என்பது குறித்து கங்குலி கூறியதாவது :

கடந்த 2017, 2019-ம் ஆண்டுகளில் அதாவது சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. 

ஆனால், கடந்த உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. 

நான் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பார்த்த வரையில், இந்திய அணியின் மோசமான ஆட்டம் அதுதான் என நினைக்கிறேன்.  என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. 

ஆனால், போதுமான சுதந்திரத்துடன் இந்த உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய வீரர்கள் விளையாடவில்லை என நான் நினைக்கிறேன்' என்றார். 
*

Share this story