சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? : ஷேவாக் பதில்
 

By 
The best Captain Ganguly Tonia  Sehwag responds

கங்குலி, டோனி தலைமையின் கீழ், பல வீரர்கள் விளையாடினர். அவர்களில் முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். 

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அவர், இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது :

இருவருமே சிறந்த கேப்டன்கள். ஆனால், கங்குலியையே சிறந்த கேப்டனாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் புதிதாக ஒருஅணியை உருவாக்கினார். 

நம்பிக்கைக்கு உரிய வீரர்களை தேர்ந்தெடுத்து, அணியை மீண்டும் கட்டமைத்தார்.

இந்திய அணிக்கு வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் கங்குலி.

நாங்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தோம். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற கற்றுக்கொடுத்தார். கங்குலி இள மற்றும் திறமையான அணியை ஒன்று சேர்த்தார்.

கங்குலி விட்டுச்சென்ற அந்த வேலையை, டோனி சிறப்பாக தொடர்ந்தார். கங்குலி கட்டமைத்த அணியை அவர் சிறப்பாக மேம்படுத்தினார்.

டோனி புதிய அணியை தயார் செய்ய மிகவும் அதிகமாக சிரமப்படவில்லை. இருவருமே சிறந்த கேப்டன்கள் ஆவார்கள். 

ஆனால், எனது கருத்து என்னவென்றால் கங்குலிதான் சிறந்த கேப்டன் ஆவார்' என்றார்.

Share this story