கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது, இந்திய மகளிர் ஹாக்கி அணி..

By 
The Indian women's hockey team has won the hearts of millions.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.  

இதில், இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்திய அணி இறுதிவரை போராடி, இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. 

வெண்கலப் பதக்கம் :

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 

இப்போட்டியில், முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கான இதயங்கள் :

இந்நிலையில், ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சர் துஷர்காந்தி இது குறித்து கூறியதாவது :

'இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை இழந்தது, ஆனால், அவர்களின் விளையாட்டின் சிறப்பு கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை வென்றுள்ளது. 

ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கும். இரு அணிகளின் செயல்திறன், எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்' என்றார்.

Share this story