விராட்கோலியை திருமணம் செய்ய விரும்பிய வீராங்கனை, ஓரினச்சேர்க்கையாளரை மணம் முடிக்க முடிவு..

இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர் டேனியல் வியாட் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் தீவிரமான ரசிகர். இவர் டுவிட்டரில் தனது தோழியுடன் முத்தம் கொடுப்பதை போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் "என்றென்றும் என்னுடையது," என தலைப்பிட்டிருந்தார். சிஏஏ தளத்தில் பெண்கள் கால்பந்தின் தலைவராக அவரது தோழி ஹாட்ஜ் இருக்கிறார். வியாட் மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ஏலம் போகவில்லை. மேலும் எந்தவொரு அணியும் விரும்பினால் அவர் மாற்று வீரராக களம் இறங்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
மேலும் விராட் கோலியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக 2014-ம் ஆண்டு வியாட் டுவிட் செய்திருந்தார். அதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நினைவூட்டும் வகையில் பதிவு செய்தனர். விராட் கோலியை திருமணம் செய்வதாக விருப்பம் தெரிவித்த வியாட் தற்போது ஓரினச்சேர்க்கையாளரை திருமணம் செய்யவுள்ளதாக வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வியாட் இங்கிலாந்துக்காக 102 ஒருநாள் மற்றும் 143 டி20 விளையாடியுள்ளார். 50 ஓவர் வடிவத்தில் அவர் 1776 ரன்கள் மற்றும் 27 விக்கெட்டுகளை வைத்திருக்கிறார். அவர் 2369 ரன்கள் எடுத்தார் மற்றும் மிகக் குறுகிய வடிவத்தில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.