மாற்றுத்திறனாளியான ஒரு சதுரங்க வீராங்கனையின் துயரம்..
 

The tragedy of a disabled chess player ..


மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதாக குற்றம் சாட்டுகிறார் பஞ்சாப் வீராங்கனை மலிகா ஹண்டா.

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.  

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நாடு தழுவிய முழு அடைப்பும் மலிகா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அந்த சதுரங்க வீராங்கனைக்கு தற்போதைய தேவை அரசு வேலையும் வெகுமதியும்தான்.   

ஆனால், பஞ்சாப் அரசு தன்னை ஏமாற்றி விட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எனக்கு ரொக்க வெகுமதியை அறிவித்திருந்தார், அதற்கான அழைப்புக் கடிதமும் என்னிடம் உள்ளது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நான் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பர்கத் சிங்கை டிசம்பர் 31 அன்று சந்தித்தேன். 

காது கேளாதோர் விளையாட்டுகளுக்கான கொள்கை இல்லாததால், மாநில அரசால் வேலை மற்றும் ரொக்கப் பரிசு வழங்க முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். 

மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டது' என தெரிவித்துள்ளார்.
*

Share this story