என் வாழ்வின் கடைசிக்கட்டம் இது : எம்.எஸ். டோனி 

csk99

ஐபிஎல் கிரிக்கெட்டின் 29வது லீக் ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றிக்கு பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில்,

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது.. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்' என்றார்.

 

Share this story