டிஎன்பிஎல் ஏலம்: நடராஜன் முதல் சாய் கிஷோர் வரையில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட டாப் பிளேயர்ஸ்..

By 
nini

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசனுக்கான ஏலம்நடைபெற்றது. இதில், டி நடராஜன், சந்தீப் வாரியர், சாய் கிஷோர், அபிஷேக் தன்வர், சஞ்சய் யாதவ், சரவணக் குமார் ஆகியோர் கீ பிளேயர்ஸ்களாக திகழ்ந்தனர். இவர்களை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணியும் கடுமையாக போட்டி போட்டது.

அந்த வகையில் ஆல்ரவுண்டரான சாய் கிஷோருக்கு அடிப்படை விலையாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரையில் 9 டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடிய சாய் கிஷோர் 233 ரன்களும் 18 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சாய் கிஷோரை ஏலம் எடுக்க ஐட்ரீம் மற்றும் சேப்பாக் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியாக ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

இதுவரையில் எந்த வீரரும் ரூ.21.6 லட்சத்திற்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டதில்லை. கடந்த சீசனில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக ரூ.21.6 லட்சத்திற்கு லைகா கோவை கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இதுவே அதிகபட்ச தொகையாக இருந்தது. இந்த நிலையில் தான் முதல் முறையாக டிஎன்பிஎல் வரலாற்றில் சாய் கிஷோர் அதிகபட்சமாக ரூ.22 லட்சத்திற்கு ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று மற்றொரு வீரரான் சஞ்சய் யாதவ் அதிகபட்ச தொகையாக ரூ.22 லட்சத்திற்கு திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் ஸ்டார் பிளேயரான டி நடராஜன் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் ரூ.11.25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ரூ.10.50 லட்சத்திற்கு சந்தீப் வாரியர் ஏலம் எடுக்கப்பட்டார். ஜி பெரியசாமி ரூ.8.80 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார்.

அபிஷேக் தன்வர் ரூ.12.20 லட்சத்திற்கு திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் ஹரிஷ் குமார் ரூ.15.40 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். திருச்சி கிராண்ட் சோழா அணியில் மோகித் ஹரிஹரன் ஆர் எஸ் ரூ.10.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வீரர்கள்:

ஆண்டனி தாஸ், டேரில் எஸ் ஃபெராரிரோ, மோனிஷ் சதீஷ், கங்கா ஸ்ரீதர் ராஜூ வி, ஜாஃபர் ஜமால், ராஜ்குமார் ஆர், ஷாஜகான் எம், அக்‌ஷர் வி ஸ்ரீனிவாசன், ஈஸ்வரன் கே, காட்சன் ஜி, வினோத் எஸ் பி, கார்த்திக் சண்முகம் ஜி, ராஜ்குமார் கே, மணி பாரதி கே, சரண் டி, டி நடராஜன், அதிசயராஜ் டேவிட்சன் ஆர், சிலம்பரசன் ஆர், அலெக்ஸாண்டர் ஆர், பூபாலன் எஸ்

லைகா கோவை கிங்ஸ் வீரர்கள்:

சச்சின் பி, ஆதிக் உர் ரஹ்மான் எம் ஏ, வித்யுத் பி, ஹேம்சரண் பி, சுஜய் எஸ், ஷாருக் கான், சாய் சுதர்சன், முகமது எம், கௌதம் தாமரை, கிரண் ஆகாஷ், முகிலேஷ், யுதீஷ்வரன், திவாகர் ஆர், ஓம் பிரகாஷ் கே எம், சுரேஷ் குமார் ஜே, ராம் அரவிந்த் ஆர், ஜதாவேத் சுப்ரமணியன், சித்தார்த்.

நெல்லை ராயல் கிங்ஸ்:

சூர்யபிரகாஷ் எல், வீரமணி டி, அஜிதேஷ், கார்த்திக் மணிகண்டன், விக்னேஷ், நிதிஷ் ராஜகோபால், ஸ்ரீ நிரஞ்சன், மிதுன், கபிலன், ஹரிஷ், எம்மானுவேல் செரியன், ரோஹன், சுகேந்திரன், அருண் குமார், லக்‌ஷய் ஜெயின், அருண் கார்த்திக், ரித்திக் ஈஸ்வரன், சோனு யாதவ், மோகன் பிரசாத், பொய்யாமொழி, சந்தீப் வாரியர்.

Share this story