ரிங்கு சிங்கிற்கு.. டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் வாழ்த்து..

By 
rsingh1

நேற்று முன் தினம் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 3ஆவது முறையாக தட்டிச் சென்றது.

வெறும் 72 நிமிடங்களில் கேகேஆர் வெற்றியை தட்டிச் சென்றது. இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரையில் விருது வழங்கும் விழாவிற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் கேகேஆர் வீரர்கள் அடுத்தடுத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வளவு ஏன், 2ஆவது சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் அப்படி ஒன்றும் சோபிக்கவில்லை.

எனினும், அவர் ஆலோசகரான கவுதம் காம்பிர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் சீனியர் கிரிக்கெட்டில் எந்த டிராபியும் வென்றதில்லை. அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் ஐபிஎல் 2024 தொடரில் கேகேஆர் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து ரிங்கு சிங்கிற்கு டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் வீடியோ கால் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார். ஆனால், இதுவரையில் ரிங்கு சிங் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து விளையாடவில்லை.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் முதல் பேட்ஜ் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து 2ஆவது பேட்ஜில் இடம் பெற்ற வீரர்கள் இன்று அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story