விராட்கோலிக்கு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பாராட்டு

To Virat Kohli, former captain of Pakistan women's cricket team praised

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின், சூப்பர் 12 சுற்றுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.

துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

கட்டித்தழுவி வாழ்த்து :

தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கட்டித்தழுவி, இந்திய கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில், விராட் கோலியின் இந்த செயலை, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் வெகுவாக பாராட்டியுள்ளார்.  

முன்மாதிரியாக திகழ்கிறார் :

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'தோல்வியை இந்திய கேப்டன் விராட் கோலி பரிவோடு, அருமையாக கையாண்டார். அவரது விளையாட்டு உணர்வை மதிக்கிறேன். 

அவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. 

இதுபோன்ற செயல்கள் மூலம், முன்னணி வீரர்கள் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். 

அடுத்த போட்டியில், இந்திய அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்றால், நான் ஆச்சரியப்பட மாட்டேன். 

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதுவதை பார்க்க முடியும் என நம்புகிறேன்' என்றார்.
*

Share this story