இன்று, ஹைதராபாத் அணியை வீழ்த்தி; இறுதிப்போட்டிக்கு தமிழகம் முன்னேற்றம் : கப்பு முக்கியம்ல..

Today, Hyderabad beat the team; Tamil Nadu progress to final Cup is not important ..

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதியில்,  இன்று நடைபெற்ற ஆட்டத்தில், தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற தமிழகம்  பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
 
அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே ரன்கள் எடுக்க  தடுமாறினர். 

இதனால், 18.3 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை  இழந்து, 90 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது ஹைதராபாத் அணி .

தமிழக அணியின் சரவணகுமார் அபாரமாக பந்துவீசி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதனைத் தொடர்ந்து, 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து, 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. 

தமிழக அணியின் சார்பில், அதிகபட்சமாக கேப்டன் விஜய் ஷங்கர் 43 ரன்கள் எடுத்தார்.

Share this story