இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் பாஜகவில் இணைந்தார்; ஏனெனில்..

Today, the famous cricketer joined the BJP; Because ..

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

பாஜக திட்டம் :

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா பாஜக- வில் இணைந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த தினேஷ் மோங்கியா இன்று பாஜகவில் இணைந்தார். 

இவரை பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளராக அல்லது வேட்பாளராக களமிறக்க பாஜக திட்டமிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விரும்புகிறேன் :

பாஜகவில் இணைந்தது தொடர்பாக தினேஷ் மோங்கியா கூறுகையில், 'பாஜகவில் இணைந்து பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். 

நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவை தவிர, வேறு எந்த கட்சிகளும் சிறப்பாக செயல்படவில்லை’ என்றார்.
*

Share this story