வர்லாம் வர்லாம் வா; இந்தூர் டி 20 போட்டிக்காக விராட்கோலி..

By 
hindur

* இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி மொஹாலியில் நடந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தொடருக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருந்தும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டி 20 போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் நாளை நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் விளையாடுவதற்காக அவர் மும்பையில் இருந்து இந்தூர் கிளம்பி சென்று அணியுடன் இணைய உள்ளார். கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு அவர் டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணைக் கேப்டனாகியுள்ளார். இஷான் கிஷானுக்கு பதில் துருவ் ஜெரலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷமி அணியில் இடம்பெறவில்லை.

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஷூப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.

Share this story