அதிரடி காட்டிய விராட் கோலி.! கடைசி ஓவரில் ஆர்.சி.பி வெற்றி.! போராடி தோற்ற பஞ்சாப் அணி..

By 
rrrc

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்றொரு துவக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஷிகர் தவான் 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெங்களூர் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த கேமரூன் கிரீன் 3 ரன்னில் ஆட்டம் இழக்க, மறுமுனையில் துவக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அவர், 31 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகள் அடித்து அரை சதம் எடுத்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் ரன் குவிப்பில் ஈடுபட்டார் விராட் கோலி. இருப்பினும் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலி ஆட்டம் இழந்தார்.

இதை அடுத்து, பெங்களூர் அணி தடுமாறிய நிலையில்,  தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.  

19.2 ஓவரில்   178 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

Share this story