ஸ்ரீராமரைப் போன்று வில் அம்புகளை இழுத்து போஸ் கொடுத்த விராட்கோலி: வைரலாகும் நிகழ்வு..

By 
asas4

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முகமது சிராஜ் வேகத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்தது. 

இந்தப் போட்டியில் எப்படி முகமது சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக அனைவரது கவனத்தை ஈர்த்தாரோ, அதே போன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி தனது சிறப்பான செயலால் உலகளவில் கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களது கவனத்தை ஈர்த்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்த போது கேசவ் மகாராஜ் களமிறங்கினார். அப்போது, தென் ஆப்பிரிக்கா டிஜே, ராம் சியா ராம் என்ற பக்தி பாடலை ஒலிக்கச் செய்தார்.

இதனை கேட்ட விராட் கோலி, தனது கைகளை மடக்கி, ராமரின் சின்னமான தோரணையை நினைவுபடுத்தும் வகையில், ஒரு வில் அம்பை இழுத்து, ராமருக்கு ஒரு தனித்துவமான அஞ்சலி செலுத்துவது போன்று போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்தப் போட்டியில் மார்கோ ஜான்சனின் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு விராட் கோலி ஐடியாவும் கொடுத்துள்ளார். அவர் சொன்னது போன்று பந்து வீசிய முகமது சிராஜ், ஜான்சனின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story