ஐபிஎல் தொடரிலும் விராட்கோலி விளையாட மாட்டார்?: கவாஸ்கர் பரபரப்பு தகவல்..

By 
sv11

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இந்த தொடரில் இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கோலி இடம்பெறவில்லை. 

முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய கோலி, இப்போது முழுவதுமாக விலகினார்.

லண்டனில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதனால்தான் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அடுத்து நடக்கவுள்ள ஐபிஎல் தொடரிலாவது அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “கோலி, இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியபோது ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் போகலாம்” எனக் கூறியுள்ளார்.
 

Share this story