புதிய தலைமைப் பயிற்சியாளர் ஆகிறார் விவிஎஸ் லக்‌ஷ்மண் : பிசிசிஐ அறிவிப்பு

VVS Laxman becomes new head coach BCCI announcement

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்.

இவர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று உள்ளார். 

இதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்  விவிஎஸ். லக்‌ஷ்மண் நியமிக்கப்பட உள்ளார்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வரும் 13-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக இருந்து வரும் ரிஷிகேஷ் கநிட்கர் அல்லது சிடான்ஷு கோடக் ஆகிய இருவரில் ஒருவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடரில் பங்கேற்கும்  இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார்.a

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில், 20 வீரர்கள் இடம்பெறுவார்கள். அதில் வலைப்பயிற்சி வீரர்களும் அடங்கும்.

தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் வருடாந்திர நெல்சன் மண்டேலா விழாவில் பங்கேற்பதற்காக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அவர்கள் அந்த விழாவில் கந்து கொள்வார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை' என பிசிசிஜ தெரிவித்துள்ளது.
*

Share this story