உலகக்கோப்பை தொடர் முழுவதும் நன்றாக விளையாடினோம், முடிவில் சொதப்பினோம்: இந்திய கேப்டன் வேதனை..

By 
r55

அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்துவிட்டது.

இதேபோல் தான் நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டிகள் தோற்றது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் என ஜூனியர் வீரர்கள் மீது ரசிகர்கள் மிகுந்து எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களும் ஏமாற்றி விட்டார்கள். இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் உதய் சகாரன், 

'என் அணி வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் எங்களுடைய போராட்ட குணத்தை காண்பித்தோம். இந்த ஆட்டத்தில் நாங்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழந்து விட்டோம். 

ஆடுகளத்தில் பேட்டிங் செய்யும்போது கூடுதலாக இன்னும் சில நேரம் நாங்கள் செலவழித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். இந்த இறுதிப் போட்டிக்காக நாங்கள் அனைத்து முறையிலும் தயாராக இருந்தோம். எனினும் எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இந்த தொடர் மூலம் எங்களுக்கு பல பாடங்கள் கிடைத்து இருக்கிறது.

நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். எங்கள் அணி வீரர்களுக்கு எங்கள் பயிற்சியாளர் மற்றும் குழுவினர் மிகுந்த ஆதரவளித்தார்கள். அண்டர் 19 உலக கோப்பை தொடர் - அதிக ரன்கள் ,அதிக விக்கெட் எடுத்தவர்கள் லிஸ்டில் இந்தியா ஆதிக்கம் அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

இத்துடன் எங்களுடைய பயணம் நிச்சயம் நிறைவேறாது. நாங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்வோம் என்று விளையாடியதை விட நாங்கள் மேம்பட்டு வீரராக தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.


 

Share this story