இந்தியாவின் வெற்றியைத் தடுக்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் : கேப்டன் டீன் எல்கர்

We will make every effort to prevent India from winning Captain Dean Elgar

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தப் போட்டி குறித்து, தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர் கூறியதாவது :

சர்வதேச அளவில் அவர்கள் முதலிடத்தில் இருக்கலாம். நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ஒரு கிரிக்கெட் பார்வையாளராக இதை தெரிவிக்கிறேன்.

கடைசிப் போட்டிகளில் அவர்கள் செயல்பட்டதை வைத்து, அவர்களது திறமையை மதிப்பிடக் கூடாது. நாங்கள் எங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறோம். இந்த தொடர் முழுவதும் அது எங்கள் அணிக்கு கூடுதல் பலம்.

இந்தியாவின் வெளிநாட்டுப் பயண வெற்றிக்கு அவர்களது வேகப்பந்து வீச்சு காரணமாக இருக்கலாம்.  தென்னாப்பிரிக்க ஆடுகள தன்மையை அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதுகிறேன்.

அதேநேரத்தில், அவர்களது பந்து வீச்சாளர்களின் பலத்தை நாங்கள் அறிவோம். 

இந்த தொடரில், இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும்' என்றார்.
*

Share this story