இந்தியாவுல விளையாட மாட்டோம்னு, இவங்க சொல்லமாட்டாங்க.. காரணம் பணம்..

We will not play in India, not to mention .. because money ..

பாதுகாப்பை காரணம் காட்டி, பாகிஸ்தான் சென்று விளையாட நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மறுத்துள்ளன.

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களே கடந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. 

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவாஜா கூறுகையில், கிரிக்கெட் விளையாட பாதுகாப்பான நாடு என்று பாகிஸ்தான் மீண்டும் நிரூபித்துள்ளது. 

ஆனாலும், அங்கு விளையாட மாட்டோம் என்று சொல்லும் வீரர்கள், இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். காரணம் பணம் என தெரிவித்துள்ளார்

Share this story