வெஸ்ட்இண்டீஸ்-பாக்.மோதல் : பாபர் அசாம் 77 ரன், ஆட்டநாயகன் அப்ரிடி..மற்றும் விவரம்..

West Indies-Pakistan clash Babur Assam 77, captain Afridi..and details ..

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் தொடங்கியது. 

பாபர் அசாம் :

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்து, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

பவாத் ஆலம் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் 75 ரன்னில் அவுட்டானார்.
 
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட், சீலஸ் 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பானர் 37 ரன்னும், பிளாக்வுட் 33 ரன்னும், ஹோல்டர் 26 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், பஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இம்ரான் பட் 37 ரன்னும், பாபர் அசாம் 33 ரன்னும், அபித் அலி 27 ரன்னும், அசார் அலி 22 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், பிராத்வெயிட், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 17 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பிராத்வெயிட் :

இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தது. 

பிராத்வெயிட் தாக்குப் பிடித்து 39 ரன்னும், கைல் மேயர்ஸ் 32 ரன்னும் எடுத்தனர். கடைசிக் கட்டத்தில் கேப்டன் ஹோல்டர் ஓரளவு போராடினார். அவர் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளைக்கு முன், மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிது தடைபட்டது. 

ஆட்ட நாயகன் :

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமனிலை செய்துள்ளது பாகிஸ்தான் அணி. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே, நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது.

Share this story