அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ‘தவிர்த்த’ டோனி, கோலி, ரோகித் - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

By 
ram mandir7

அயோத்தியில் திங்கள்கிழமை நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் விழாவை தவிர்த்தது தொடர்பாக நெட்டிசன்கள் தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். தமிழ்த் திரையுலகில் ரஜினி, தனுஷ் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் தொடங்கி ஆயுஷ்மான் குர்ரானா வரையிலும், தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மலையாள திரையுலகிலிருந்து முன்னணி நடிகர்கள் யாரையும் காண முடியவில்லை. கன்னட திரையுலகிலிருந்து ரிஷப் ஷெட்டி வந்திருந்தார். சச்சின் டெண்டுல்கர், அனில் கும்பளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் ரோகித் சர்மா, விராட் கோலியும் கலந்துகொள்ளவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மா கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான நெட்டிசன்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

நெட்டிசன் ஒருவர், “தோனி எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன், “அழைப்பு கொடுக்கப்பட்டும் தோனி விழாவுக்குச் செல்லவில்லை” என பதிவிட்டுள்ளார்.

“உங்கள் மூவரைக்கண்டும் வெட்கப்படுகிறேன்” என ஒருவர் தெரிவித்துள்ளார்.

“மூவரும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேடுப்பதில்லை” என நெட்டிசன் ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“தோனிக்கு சல்யூட்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Share this story